அப்பாவுடன் நான் richie street போவதுண்டு. அளவு எடுத்து speaker box மட்டும் ஒரு இடத்தில் செய்வோம், அதற்கு அப்புறம் ஒரு முறை woofer வாங்க, அதற்கு அப்புறம் ஒரு முறை tweeter வாங்க, circuit board வாங்க ஒரு முறை, transformer லொட்டு லொசுக்கு என்று ஒரு ஒரு மாதம் ஒவ்வொன்று. இதை எல்லாம் ஏன் ஒரே முறையில் வாங்கவில்லை என்று யோசித்ததே இல்லை. இப்பொழுது யோசித்தால், ஸ்கூல் formல் வருட சம்பளம் போடும் இடத்தில் நான் மாத சம்பளத்தை போட்டதாக நினைத்து திருத்திய டீச்சரின் முகமும், குழம்பிய நிலையில் நான் நின்றதும் தான் நியாபகம் வருது.
ரிச்சி ஸ்ட்ரீட் கடையில் அவர் நண்பர் ஒருவர் இருப்பார். அவர் தான் assemble செய்வார். பெரிய chief technician. இப்பொழுது அந்த ஆளை பற்றி நினைத்தால் கூட “யோவ் “ என்று எதையாவது சொல்லி திட்ட தோணும். என் அப்பாவிற்கும் electronics தெரியும். இரண்டு பேரும் “அபப்டி இல்லை மகேஷ் இப்படி இல்லை அப்படி" என்று பேசியதையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருப்பார்கள். பெரிய விஞ்ஞானிகள் போல ஒரு மிதப்பு இருக்கும் முகத்தில்.
நான் school படிக்கும்போது ரிச்சி streetக்கு தனியாக போனால் கூட அப்பா எப்படி இருக்கிறார் என்று கடை காரர்கள் கேட்கும் அளவிற்கு அங்கே சுத்திருக்கோம். போறா குறைக்கு என் அப்பாவிற்கு மீரான் சாஹிப் தெருவில் ரீல் பெட்டி வைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் எந்த அவசரமும் இல்லாமல் பேச்சும் சிரிப்பும். எதுக்கு டா இவருடன் வந்தோம் என்று வெறுப்பாய் இருக்கும். ரீல் பெட்டி ஆசாமிகளிடம் போயி என் மானத்தை வாங்கும் விதமாய் "இவனுக்கு சொல்லுங்க பொறுமையே இல்லை" என்று சொல்லுவார். நம்ம chief technician எப்பொழுதும் அவசரமே படாமல் தான் வேலை செய்வார். எனக்கு உடனே இதை எல்லாம் ஒண்ணா சேர்த்து assemble செய்து பார்க்க வேண்டும் போல இருக்கும். இன்று பீர் குடிக்க வேண்டும் என்று தோணிய போதும் கூட, என் அவசரத்துக்கு இந்த உலகத்தில் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்தேன். ஒரு வேளை இந்த பக்குவம் முதலில் வந்த இடம் ரிச்சி ஸ்ட்ரீட்டாக கூட இருக்கலாம். காலை 10 மணிக்கு போனா இரவு 9.30 மணி ஆகும். டீ, புகை இதற்கு ஒன்னும் குறையே இல்லை. விஞ்ஞானிகள் அப்படி தான் இருப்பார்கள்.

சரி எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தால் ஒரு screw driver ஐ மெதுவா உள்ளே விட்டு ஒரு screwவை திருப்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரே பாட்டு வித விதமான வேகத்தில் ஓடும். எனக்கு அந்த பாட்டை எல்லாம் கேட்டாலே பிடிக்காது. டங்கு டக்கு டங்கு டக்கு வேற வேற வேகத்தில் ஓடும். என் அப்பாவும் அவரை விடவே மாட்டார். அந்த guitar கேட்கவில்லை, இது கேட்கவில்லை அது கேட்கவில்லை என்று சொல்ல... திருவிளையாடல் சிவாஜி தருமியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போகும்போது ஒரு திமிறு இருக்குமே, அந்த மாதிரி நம்ம chief முகத்தை வைத்துக்கொண்டு "எல்லாத்தையும் திரும்ப கழட்டி, இதை மாற்ற வேண்டும், நாளைக்கு தான் வரும்" என்று சொல்லிவிடுவார். ஏமாற்றத்தின் உச்சத்தில் நான் இருப்பேன். இசையை கேட்கவேண்டும் என்றெல்லாம் எனக்கு பெரிய ஆசை இல்லை. புதுப் பொருள் ஒன்று என் வீட்டிற்கு வர போகிறது. அது மட்டும் தான் என் மனதில் இருக்கும்.
இப்படி ஒரு வழியாய் ஒரு assembled player வாங்கிட்டு வந்தா என் அம்மா இது எல்லாம் தேவையா என்று தலையில் அடித்துக்கொள்வாள். "இப்பொழுது எல்லாம் சின்னதா வருது" என்று ஒரு பக்கம் கத்துவாள்.இந்த மனுஷன் detailing கேட்காது என்று வெக்கையில் fan கூட போடாமல் கதவு சாத்திக்கொண்டு உட்காருவார் .இந்த ரணகளத்தில் நான் ஒரு casette வாங்கிட்டு வந்து கேட்டே ஆகவேண்டும் என்று சொல்ல, "இவன் பாட்டை எல்லாம், என் player ல கேட்காத, உனக்கு வேணும்ன்னா walkman ல கேளு" என்று அப்பா சொல்ல, பெரிய சண்டை வெடிக்க "இவன் எல்லாம் ஒரு ஆளு. சும்மா டங்கு டக்கு டங்கு டக்குன்னு தட்டுவான்" என்று நான் சொல்ல, விழுந்தது ஒரு அடி.
சமீபத்தில் ரிச்சி street போயிருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அப்பா எப்படி இருக்கிறார் என்று மீரான் சாஹிப் தெருவில் ரீல் பெட்டி வைத்திருந்தவர் கேட்டார். டங்கு டக்கு புரிய 20 வருடம் ஆகிடுச்சு.